Facebook பக்கங்களை நாம் இருவிதங்களில் “Like” செய்கிறோம்: ஆதரவு தரவும், செய்திகளைப் பெறவும்!
இதனால், சில ஃபேஸ்புக் பக்கங்கள் ஏராளமான லைக் பெற்று முன்னணியில் இருப்பது சகஜம்தான். ஆனால், இது எப்படி நிகழ்கிறது என்பது யாருக்கும் தெரியாத விநோதமாக இருக்கிறது. சில குறிப்பிட்ட பக்கங்கள் ஏன் இத்தனை லைக் பெற்றன என்று யாருக்கும் புரிவதில்லை. உதாரணமாக, இங்கே நாங்கள் தொகுத்துத் தந்திருக்கும் பட்டியலைப் பாருஙக்ளேன்:
1. Vin Diesel: இந்த நடிகர் டிஸ்னி, இசைப் பக்கங்களையெல்லாம் விட அதிக லைக் பெற என்ன காரணமாக இருக்கும்? இத்தாலியின் மக்கள் தொகையைவிட இவரது லைக் எண்ணிக்கை அதிகம் (6.4 கோடி!)
2. Skittles: இந்தப் பக்கத்தின் லைக் எண்ணிக்கை வட கொரியாவின் மக்கள் தொகையைவிட அதிகம் (2.5 கோடி)
3. I don’t care how comfortable crocs are, you look like a dumbass: இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் ஐந்து வருடமாக ஒன்றும் எழுதப்படவில்லை. ஆனால் பதினைந்து லட்சம் பேர் இதனை லைக் செய்துள்ளார்கள்.
4. Pringles: ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையைவிட அதிகமாக ரசிகர்களின் எண்ணிக்கை கொண்ட பக்கம் இது. ரெண்டரை கோடிப் பேர்!
5. Dear Pringles, I cannot fit my hand inside your tube of deliciousness: இதுவும் ப்ரிங்கிள் ரசிகர் பக்கம்தான், 11 லட்சம் பேர் கொண்டது.
6. A relationship is not a test so why cheat?: சிகாகோவின் மக்கள்தொகையைவிட அதிகப் பேரைக் கொண்ட பக்கம் இது. முப்பத்தொரு லட்சம் பேர்!
7. My sister said if I get one million fans she will name her baby Megatron: இந்த விநோதமான பக்கம் தான் உருவாக்கப்பட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்துவிட்டது, ஏற்கெனவே 15 லட்சம் பேர் இதனை லைக் செய்துள்ளார்கள்.
8. I hate when my parents ask who I’m texting: நியூசிலாந்தின் மக்கள் தொகைக்கு இணையான மக்கள், பெற்றோருக்கு எதிராகக் கொடி உயர்த்தும் இந்தப் பக்கத்துக்கு நாற்பது லட்சம் பேர் ஆதரவு!
9. I heart the weekend: ஒரு கோடிப் பேர் இந்தப் பக்கத்தில் ஒன்றுகூடி “எங்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஆகிவிட்டால் குஷியாகிவிடும்” என்கிறார்கள்!