Software உருவாக்க வேணுமா ? அப்ப படிங்க - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, February 7, 2014

Software உருவாக்க வேணுமா ? அப்ப படிங்க


இங்கே வயது ஒரு பிரச்னையே இல்லை. யாரும் ப்ரொக்ராம் எழுதலாம், கை பிடித்துக் கற்றுத்தரப் பல தளங்கள் உள்ளன, அதுவும் இலவசமாகவே!
இணையத்திலும் அதற்கு வெளியிலும் கம்ப்யூட்டர் ப்ரொக்ராம் எழுதக் கற்க விரும்புவோருக்கு உதவுகின்ற ஆறு சிறந்த வழிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்:
1. Codecademy: எளிதில் புரியும் பாடங்கள் வழியே பைதான், ரூபி போன்ற பிரபலமான ப்ரொக்ராமிங் மொழிகளைக் கற்கலாம். இணையத்தின் அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டு உங்கள் இணையத் தளத்தை நீங்களே உருவாக்கலாம். தனியாகவோ, நண்பர்களோடு சேர்ந்தோ படிக்கும் வசதி உண்டு. நீங்களே பாடங்களையும் உருவாக்கலாம், முற்றிலும் இலவசம்!
2.OpenCourseWare Consortium: 2002ம் ஆண்டில் MIT கல்வி நிறுவனம் தனது பாடங்களை இணையத்தில் ஏற்றியபோது OCW உருவானது, பின்னர் பல கல்வி நிறுவனங்கள் இதில் பங்கேற்று இன்று இது ஒரு மிகப் பெரிய இணையக் கல்வி சாலையாக உள்ளது. ப்ரொக்ராமிங் தவிர பல விஷயங்களையும் இதில் படிக்கலாம், முற்றிலும் இலவசம்.
3. Coursera: இதுவும் கல்லூரிப் பாடங்களை ஆன்லைனுக்குக் கொண்டுவரும் முயற்சிதான். ஆனால் இங்கே மிகச் சிறந்த கோர்ஸ்கள்மட்டுமே இடம்பெற்றிருக்கும். OCWல் காணமுடியாத பல கல்லூரிகளை இங்கே காணலாம். பாடங்கள் இலவசம், அவற்றுக்கான சான்றிதழ் வேண்டுமென்றால் சில நேரங்களில் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கலாம்.
4. Khan Academy: சல்மான் கான் என்பவரால் தொடங்கப்பட்டு, இப்போது மிகப் பெரிய கல்வித் தளமாக வளர்ந்திருப்பது. இங்கே சிறு வீடியோக்கள், பயிற்சிகள்மூலம் ப்ரொக்ராம் எழுதக் கற்கலாம். அனைத்தும் இலவசம்.
5. Treehouse: இணையம்மூலம் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து ப்ரொக்ராம் எழுதக் கற்று வேலையும் வாங்கலாம் என்று நம்பிக்கையூட்டும் தளம் இது. ஐபேடிலும் பாடங்கள் உள்ளன. மாணவர்களோடு கலந்து பேசும் வசதிகள் உள்ளன, மாதம் $25 முதல் $49வரை செலவாகும்.
6. Local Accelerated Training Programs: இவைதவிர, நீங்கள் நேருக்கு நேர் பாடங்களைப் படிக்கவும் அனுபவம் பெறவும் விரும்பினால், உங்கள் ஊரில் எங்கே ப்ரொக்ராம் கற்கும் வசதி உண்டு என்று கவனியுங்கள். Dev Bootcamp, AppAcademy போன்றவை இதற்கான சவுகர்யங்களை வழங்குகின்றன. செலவு மிக அதிகம் ($10,000க்குமேல்). ஆனால், இதன்மூலம் கிடைக்கும் கல்வியின் தரமும், தொடர்புகளும் நிறைய!

Post Top Ad

Responsive Ads Here