கார்களுக்கிடையிலான வயர்லெஸ் தொடர்பு கட்டாயம்? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, February 7, 2014

கார்களுக்கிடையிலான வயர்லெஸ் தொடர்பு கட்டாயம்?

ஓட்டுநர் பாதுகாப்புக்காக, வாகனங்களுக்கிடையே வயர்லெஸ் தொடர்பை உருவாக்கலாம் என்று அமெரிக்க அரசாங்கம் எண்ணுகிறது. இது கட்டாயமாக்கப்படலாம் என்கிறார்கள்!
போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில், தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறை (NHTSA) நிர்வாகி டேவிட் ஃபைட்மன் இதற்கான திட்டத்தை விவரித்துள்ளார். ’இன்னும் சில பத்தாண்டுகளுக்குப்பின்னர், இது ஒரு முக்கியமான மாற்றம் என்பதை நாம் உணர்வோம். சீட் பெல்ட்போல, ஏர்பேக்போல இதுவும் பாதுகாப்புக்கு அவசியம்!’
இதற்கான பரிசோதனைகள் ஏற்கெனவே 3000 கார்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. அதன்மூலம் வாகனப் பாதுகாப்பும் மேம்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கார்கள் ஒன்றோடொன்று பேசிக்கொள்வதால் என்ன லாபம்?
நிறைய லாபங்கள் உள்ளன. மோதுதலைத் தவிர்க்கலாம், வேக எல்லையை மீறாதே என்று எச்சரிக்கலாம், கவனமாக வண்டி ஓட்டவேண்டிய இடங்களைப்பற்றிச் சொல்லலாம்…
இதனால், அரசாங்கக் கொள்கையில் இதனை இடம்பெறச் செய்யும் முயற்சியில் உள்ளது NHTSA அமைப்பு. இந்த மாற்றம் 2017ல் நடக்கலாம் என்று நம்பப்படுகிறது, ஆனால், அதிகாரப்பூர்வமாக இதனை யாரும் உறுதி செய்யவில்லை.
’V2V எனப்படும் Vehicle-to-vehicle தொழில்நுட்பம் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்புக் கவசம்’ என்கிறார் அமெரிக்கப் போக்குவரத்துச் செயலர் அந்தோனி ஃபாக்ஸ். ‘இதன்மூலம் ஓட்டுநர்களுக்குதான் நல்லது! உலக அரங்கில் அமெரிக்காவின் ஆட்டொமொபைல் துறை முன்னணியில் இருக்கவும் இது உதவும்.’
(Source/Image Credit – NHTSA)

Post Top Ad

Responsive Ads Here