தகவல் தொழில்நுட்ப தொடர்பு சாதனங்களை தயாரித்து வழங்குவதில் சாம்சங் நிறுவனமே தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
இந்த வளர்ச்சி வேகத்தைக் கண்டு மற்ற நிறுவனங்கள் அதிசயித்து ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டுள்ளன.
சாம்சங் நிறுவனத் தயாரிப்புகள் அந்த அளவிற்கு உலகத்தரமிக்கதாக உள்ளது என்பதே இந்த வெற்றிக்காரணம். அந்த வெற்றியின் மற்றுமொரு புதிய மைல் கல்லாக தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சாம்சங் கேலக்சி ரவுண்ட் (Samsung galaxy round flexible smartphone) என்ற புதிய போனை வெளியிட உள்ளது. இணையமெங்கும், உலகெங்கு இந்த புதிய ஸ்மார்ட் போன் பற்றிய தகவல்களே பரவிய வண்ணம் உள்ளது.
வளைந்த தன்மையுடன் இருக்கும் இப்போனை கீழே போட்டாலும் உடையாத தன்மையினைக் கொண்டுள்ளதாக உருவாக்கியுள்ளது. நெகிழும் தன்மையுடன் கூடிய இந்த சாம்சங் கேலக்சி ரவுண்ட் ஸ்மார்ட் போனில் (Flexible plastic display) டிஸ்பிளே மிக நுண்ணிய பிளாஸ்டிக்கால் ஆனது. இதனாலேயே இந்த போன் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. நெகிழும் தன்மையால் கீழே விழும்போதும் எந்த ஒரு கீரலோ, உடைப்போ ஏற்படாது.
Samsung Galaxy Round Smartphone Main Specifications
5.7-inch Amoled HD 1080p flexible display (1920x1080 pixels)
Android 4.3 Jelly Bean OS
2.3 GHz quad-core Snapdragon 800 processor
13 MP rear camera
2 MP front facing camera
32 GB internal memory
7.9 mm thickness, 154 grams weight
2800 mAh battery