இந்தியாவின் பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான கார்பன் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் மொபைல் போனை வெளியிட்டுள்ளது.
Titanium X எனப் பெயரிடப்பட்ட இந்த போனில் 5 அங்குல IPS Display அமைந்துள்ளது.
மேலும் இதில் 1.5 GHz Quad - core Processor ம், 1GB RAM ம், 16 GB Internal Storage ம் அமையப்பெற்றுள்ளது. MicroSD Card பயன்படுத்தி மெமரியை அதிகப்படுத்தும் வசதியும் இதில் உண்டு.
கூடுதல் வசதியாக Dual LED Flash வசதி இணைகப்பட்டுள்ள 13 Mega Pixel Camera, வீடியோ மற்றும் முகம்பார்த்து பேசும் வசதிக்குப் பயன்படும் 5 Megapixel முன்பக்க கேமாராவும் உள்ளது.
புதிய Micro SIM பயன்படுத்தும் வசதியும் இதில் உண்டு. கூடுதலாக NFC supports, Direct Call, Flip to Mute, Shake to Answer ஆகிய வசதிகளும் உண்டு.
அதாவது ஸ்மார்ட் போனிற்கு வரும் அழைப்பை மியூட் செய்த ஸ்மார்ட்போனை திருப்பினால் போதுமானது, அதேபோல வரும் அழைப்பை ஏற்றுப் பேச ஸ்மார்ட் போனை இலேசாக குலுக்கினாலே போன்கால் அட்டெண்ட் செய்ய முடியும்.
இச்சிறந்த ஸ்மார்ட் போனில் விலை ரூபாய் 18,490.
Karbonn Titanium X Main specifications
- 5-inch (1920 x 1080 pixels) Full HD IPS display
- 1.5 GHz quad-core processor
- 1GB RAM, 16GB internal memory
- Android 4.2 (Jelly Bean)
- Single Micro SIM
- 13MP auto focus camera with Dual LED Flash
- 5MP front-facing camera
- 2300 mAh battery