நிறுவனத்தின் புதியதொரு சேவை Google Voice. இது Google Grandcentralன் மேம்படுத்தப்பட்ட சேவை ஆகும். தற்சமயம் இது அமேரிக்க வாழ் மக்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அமேரிக்க வாழ் மக்களுக்கு மட்டும் வழங்கப்படுவதால், நமக்கென்ன உபயோகம் என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
இதன் மூலம்,
நீங்கள் அமேரிக்காவில் வாழ்பராக இருந்தால்
- அமேரிக்கவில் உள்ள அனைத்து தொலைபேசி/அழைபேசியுடன் இலவசமாக பேசலாம்
- தங்களின் வாழ்நாள் முழுமைக்கும் தொலைபேசி எண்ணை மாற்ற வேண்டி இருக்காது. எந்த ஒரு போனுக்கு வரும் அழைப்பையும் இந்த எண்ணுக்கு மாற்றம் (Call Divert) செய்யலாம்.
- இந்த எண்ணுக்கு வரும் எந்த ஒரு அழைப்பையும் உங்களின் அனைத்து போன்களுக்கும் மாற்றம் செய்யலாம்.
- இலவச குறுஞ்சேவை
- இலவச வாய்ஸ்மெயில் (ஆங்கிலத்தில் இருந்தால் Transcription உடன்)
- அனைத்து வாய்ஸ் மெயில்களையும் மின்னஞ்சல்போல் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி
- தங்களுக்கு வரும் தேவையில்லா அழைப்பை தடுக்கும் (Block) வசதி
- அழைப்பை பதிவு (Record) செய்யும் வசதி
- கான்ஃபரன்ஸ் கால் வசதி
- உங்களுக்கு வரும் அழைப்பை Screen செய்யும் வசதி
- அமேரிக்க வாழ் மக்களின் தொலைபேசி/அழைபேசியை தொடர்புகொண்டு பேசுவது முற்றிலும் இலவசம்.
- உங்களுக்கு ஒரு அமேரிக்க தொலைபேசி எண்ணை இலவசமாக தருகிறது.
- தங்கள் கணினியில் இருந்து அமேரிக்க தேச தொலைபேசி/அழைபேசிக்கு இலவசமாக பேசலாம்.
- தங்கள் Google Talk Application மூலம் நீங்கள் இணைய தொடர்பில் இருக்கும் போது இலவசமாய் அழைப்பும் பெறலாம்.
- இலவச குறுஞ்சேவை
- இலவச வாய்ஸ்மெயில் (ஆங்கிலத்தில் இருந்தால் Transcription உடன்)
- அனைத்து வாய்ஸ் மெயில்களையும் மின்னஞ்சல்போல் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி
- Google/Gmail Account ஒன்று. இது நிச்சயமாய் உங்களிடம் இருக்கும்.
- அமேரிக்க தொலைபேசி எண் ஒன்று. இதற்கு நான் எங்கே செல்வது என்று கேட்க வேண்டாம். www.ipkall.com இலவசமாய் இந்த எண்ணை கொடுக்கிறது. எனவே இங்கு ஒரு கணக்கு தொடங்க வேண்டும். ஆனால் இந்த எண் மட்டும் போதாது.
- www.gizmo5.comல் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். இங்கிருந்து அமேரிக்காவின் sip phone எண் ஒன்றைப் பெற வேண்டும். இதுவும் இலவசமே!
- இந்த வசதியை நீங்கள் அமேரிக்காவில் தான் பதிவு (Register) செய்ய முடியும். இதற்காக நான் என்ன அமேரிக்காவிற்கா செல்ல முடியும் என கேட்கலாம். அதுவும் தேவையில்லை ஒரு Proxy மூலம் இதனை செய்து விடலாம்.
- இவையெல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம்............... அளவு கடந்த பொறுமை.
Step #1
நேரடியாக https://services.google.com/fb/forms/googlevoiceinvite/ தளத்திற்கு சென்று உங்களது மின்னஞ்சல் முகவரியையும், பெயரையும் கொடுத்து, Google Voice சேவைக்கான Invitationஐ பெற வேண்டும். இது உடனே கிடைத்து விடாது. இதற்கு ஒரு வாரம் ஆகலாம், ஒரு மாதமும் ஆகலாம். அது உங்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.
Step #2 (Gizmo5 ஐ Google நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதால் - இந்த வசதி தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - Updated on 20-11-09)
Step #3
பிறகு, http://phone.ipkall.com/ தளத்திற்கு சென்று புதியதாக ஒரு கணக்கு தொடங்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டியவைChoose your account type: SIP ஆகவும், SIP Phone number: என்ற இடத்தில் நீங்கள் www.gizmo5.comல் இருந்து பெற்ற SIP Phone numberஐயும், SIP Proxy:க்கு நேராக proxy01.sipphone.com என்றும், மற்ற இடங்களில் அதற்குண்டான தகவலையும் கொடுக்கவும். இதிலும் உடனே உங்களுக்கு புதிய SIP Phone number கிடைக்காது. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம்.
Step #4
உங்களுக்கு Google Voiceல் இருந்து புதியதாக கணக்கு திறக்க Invitation வந்தவுடன் USக்கான Proxyஐ தரவிறக்கம் (link updated) செய்யவும். இது Internet Explorerல் திறக்கும். அதில் உங்களின் Google Voiceக்கான Invitation லிங்க்ஐ திறக்கவும்.
Step #5
Get a Google number என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
Step #6
Step 1 of 4: Choose your number என்பதில் Area Codeஐ யோ அல்லது உங்களுக்கு வேண்டுமான எண்ணையோ அல்லது உங்களின் பெயருக்கேற்ற எண்ணையோ கொடுத்து நீங்களாக உங்களின் Google Voice எண்ணை நீங்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
Step #7
Step 2 of 4: Choose your PIN என்பதில் உங்களின் PIN எண்ணை கொடுத்து பிறகு அதனை Confirm செய்து கொள்ளவும்.
Step #8
Step 3 of 4: Add a forwarding phone என்பதில் உங்களுக்கு www.ipkall.comல் இருந்து கிடைத்த எண்ணை கொடுக்கவும்.
Step #9
இப்பொழுது http://gizmo5.com/pc/download/ சென்று உங்களது கணினிக்கான Gizmo5 மென்பொருளை தரவிறக்கம் செய்து, அதில் உங்களின் Gizmo5 கணக்கை திறந்து கொள்ளவும். பிறகு Google Voiceல் Step 4 of 4: Verify your phoneல் Cll me now கிளிக் செய்யவும். அதில் உள்ள இரண்டு இலக்க எண்ணை குறித்துக்கொள்ள மறக்க வேண்டாம்.
Step #10
இப்போது உங்களின் Gizmo5 மென்பொருளுக்கு Google Voice இடமிருந்து Confirmation Call வரும். பதிலளிக்கையில் உங்களது அந்த இரண்டு இலக்க எண்ணை தட்டச்சவும். இதன் மூலம் உங்களின் Google Voice கணக்கு தொடங்கப்படும்.
Step #11
உங்களுக்கு வரும் அழைப்புகளை Google Talk அல்லது Skypeல் பெறwww.gizmo5.com சென்று Call Forwardingல் உங்களின் Google Talk அல்லது Skype user idஐ கொடுத்து சேமிக்கவும்.
Step #12
Google Voiceல் Call Buttonஐ கிளிக் செய்து உங்களுக்கு வேண்டியவர்களை அழைக்கலாம். முதலில் இந்த அழைப்பு உங்களின் Google Talkற்கு வரும். அழைப்பை ஏற்கவும். பிறகு, உங்களின் அழைப்பு எதிர்முனைக்கு அனுப்பப்படும். அவ்வளவுதான், காலவரையின்றி அமேரிக்க தொலைபேசி/அழைபேசி எண்களுக்கு பேசி மகிழலாம்.
தங்களுக்கு தேவையான மாற்றங்களை Settings சென்று மாற்றம் செய்து கொள்ளவும். இதன் கீழ் எத்தனை போன் எண்களை (அமேரிக்க எண்) வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம். Contacts சென்று ஒருவரிடம் இருந்து வரும் அழைப்பு எந்த எண்ணிற்கு செல்ல வேண்டும் என்பதையும் வரையறுக்கலாம்.
Call Widgets சென்று உங்களை தொடர்பு கொள்ள Widgetஐ உங்களின் தளத்தில் இணைத்துக் கொள்ளலாம். நான் இத்தளத்தில் வலது ஓரத்தில் இணைத்துள்ளேன்.
முதல் முறை Google Voice Account Activate செய்யும் போது மட்டும் Proxy தேவை. பிறகு இது தேவையில்லை.
எல்லாவற்றையும் விட முக்கியம் தொடர்ந்து 30 நாட்கள் உங்களின் IPKall சேவை பயன்படுத்தப்படவில்லை எனில் உங்களின் IPKall எண் Block செய்யப்படும். 30 நாட்களுக்கு ஒருமுறையேனும் இதனைப் பயன்படுத்தவும்.
உங்களால் செய்யப்படும் அழைப்பு கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டு எதிர்முனையை அடைகிறது.
Google Voice >> IPKall >> Gizmo5 >> Google Talk அல்லது Skype
இதில் IPKallன் பயன் என்ன? நேரடியாக Gizmo5 மூலம் கிடைக்கும் எண்ணையே நேரடியாக Google Voiceற்கு பயன்படுத்தலாமே, எதற்காக இதனைப்பயன்படுத்த வேண்டும் என நீங்கள் கேட்கலாம். Google Voice இதனை ஏற்றுக் கொள்வதில்லை.
கடைசியாக Send Feedback சென்று இந்தியாவிற்கும் இந்த வசதியை ஏற்படுத்த ஒரு வேண்டுகோளை விடுக்கவும்.
நான் மேலே குறிப்பிட்டது போல் அளவுகடந்த பொறுமை மிகவும் அவசியம்!!!