நான் பொதுவா மற்றவங்களோட Blogger திறக்கும் போது, அதில் இருக்குற பதிவுகளை மட்டும் பார்க்கிறதில்லை. அந்த வலைப்பூவை எப்படி வடிவமைச்சிருக்காங்கனும் பார்க்கிறதுண்டு. ஒரு சில ப்ளாக்-ல ஒவ்வொரு பதிவையும் சுருக்கமா போட்டு அதற்கு கீழே Read More... னு ஒரு லிங்க் இருக்கும். இத எப்படி என்னோட வலைப்பூவீலேயும் கொண்டு வர்ரதுன்னு Googleஐ தட்டினா ஏகப்பட்ட பதில்கள்.
ஆனால் அது எல்லாமே நம்ம வலைப்பூவோட Codeஐ மாத்துர மாதிரியே இருந்தது. நமக்கு இதிலெல்லாம் அவ்வளவா அனுபவம் இல்லைனு அப்படியே விட்டுட்டேன்.
ஆனால் எந்த ஒரு Codeஐயும் மாத்தாமல் இதைக் கொண்டு வரலாம்னு ஒரு வழி இருக்கும் போது ஏன் இன்னும் இதை விட்டுவைக்கனும்னு அதையும் கொண்டு வந்தாச்சு.
Read More - வசதியை கொண்டு வருவது ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை.
இதற்கு தேவையானது....
உங்கள் வலைப்பூ xml வடிவில் இருக்க வேண்டும் அல்லது Clasisc வடிவில் இருக்க கூடாது. இதை Layout >> Edit Html ல் போய் xml version="1.0" encoding="UTF-8" இப்படி தொடங்குதானு பார்த்துக்கோங்க.
Settings >> Global Settings >> Select post editor லபோய் Updated Editor ஐ தேர்ந்தெடுத்துக்கோங்க
இனிமே புதிசா பதிவை போடும் போது உங்களோட summary ஐ , அதாவது Read Moreக்கு முன்னால வரப்போர உங்களோட பதிவின் சுருக்கத்தை முடிச்சிட்டு, இந்த Updated Editorன் வலது மேல் மூலையில் இருக்குற Insert Jump Break Iconஐ கிளிக்குங்க. இப்போ உங்க summaryக்கு கீழே ஒரு கோடு வரும், இதற்கு கீழே உங்களோட முழு பதிவையும் போடுங்க..
இப்போ இந்த Read More வசதி உங்களுடைய வலைப்பூவிலேயும் வந்திருக்கும். நம்ம தமிழ் விரும்புகள் கேட்கிற கேள்வி.. இந்த Read Moreங்ற வார்த்தையை தமிழில் மாற்ற முடியாதானு, அதற்கும் வழியிருக்கு Layout >> Page Elements >> Blog Posts போங்க, அங்க வலது கீழ் மூலையில் இருக்கும் Editஐ கிளிக்கி, மேலே இருந்து ரெண்டாவது வரியில் இருக்கும் Post page link text: ல் உங்களுக்கு வசதிப்பட்ட மாதிரி தட்டச்சிக்கோங்க.
அவ்வளவுதான்