மோசில்லா அறிமுகம் செய்யும் அதிவேகமான இணைய உலாவி - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 8, 2016

மோசில்லா அறிமுகம் செய்யும் அதிவேகமான இணைய உலாவி



மோசில்லா நிறுவனம் பயனாளர்களுக்கு உதவிடும் வகையில் அதி வேகமாக செயற்படக்கூடிய இணைய உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளது.

உலகின் முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான Firefox உலாவியினை அறிமுகம் செய்த மோசில்லா (Mozilla) நிறுவனம் தற்போது Mozilla Servo எனும் அதி வேகமாக செயற்படக்கூடிய மற்றொரு இணைய உலாவியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த புதிய உலாவியினை சம்சுங் நிறுவனத்துடன் இணைந்து மோசில்லா நிறுவனம் உருவாக்கி வருகிறது.

Rust எனப்படும் புதிய கணினி மொழியினைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த உலாவியானது எதிர்வரும் ஜுன் மாதம் பரிசோதனை ரீதியாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ் இணைய உலாவியானது 64bit Linux, 64bit OSX, Android, மற்றும் Gonk (Firefox OS) ஆகிய இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும், இது பயனர்களுக்கு இணைய தேடலில் புதிய அனுபவத்தினை வழங்கும் எனவும் மோசில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post Top Ad

Responsive Ads Here