Free Basics சேவை பாரபட்சமற்றது எனக் கூறும் பேஸ்புக் நிறுவனம்..! - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Saturday, December 19, 2015

Free Basics சேவை பாரபட்சமற்றது எனக் கூறும் பேஸ்புக் நிறுவனம்..!


பேஸ்புக் நிறுவனத்தின் Free Basics செயலி பாரபட்சமற்றது மட்டுமல்ல அது அனைவருக்கும் பொதுவானது என அந்த நிறுவனம் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் புதிய செயலியான Free Basics குறித்தும் அதன் செயல்பாடு குறித்தும் சந்தேகம் எழுப்பிய இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அந்த நிறுவனத்தின் துணைத்தலைவர் கெவின் மார்டின் பதிலளித்துள்ளார்.
Free Bascis செயலி என்பது பாரபட்சமற்றது எனவும் அனைத்து மென்பொருள் வடிவமைப்பாளர்களும் அதை மறுகட்டமைப்பு செய்ய வகைசெய்யப்பட்டுள்ளது எனவும் கெவின் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் Trai அமைப்புடன் இணைந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட தங்களது நிறுவனம் தயார் நிலையிலே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இணையத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு கட்டணத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் சந்தேகம் எழுப்பியிருந்தது.
அதில், வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான இணைய சேவையை இலவசமாக வழங்குவதும் அல்லது சிறப்பு கட்டணங்களை வசூலிப்பதும் தவறான அணுகுமுறையாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கருத்து தெரிவித்திருந்தது.
அனைவருக்கும் இணையம் எனும் குறிக்கோளுடன் பேஸ்புக் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட அமைப்புதான் Internet.org. அது தற்போது Free Basics என பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here