குரோம் பிரௌசரில் "Do Search" வைரஸ் நீக்குவது எப்படி? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 10, 2013

குரோம் பிரௌசரில் "Do Search" வைரஸ் நீக்குவது எப்படி?

முதலில் Do Searches என்றால் என்பதைத் தெரிந்துகொள்வோம். நீங்கள் ஏதாவது ஒரு இலவச மென்பொருளைத் தரவிறக்கும்பொழுது, அதனுடன் கூடவே இலவசமாக ஒட்டிக்கொண்டு தரவிறங்கும் ஒரு பிரௌசர் கடத்தி இது. 
நீங்கள் தரவிறக்கம் செய்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவும்பொழுது இந்த Do Searches ம் உங்கள் பிரௌசரில் நிறுவப்பட்டுவிடும். இது தானாகவே உங்களுடைய பிரௌசர் செட்டிங்சை மாற்றி அமைத்து, உங்களுடைய பிரௌசரில் உள்ள டீபால்ட் ஹோம் பேஜை மாற்றி அமைத்துவிடும். இதை ஆங்கிலத்தில் Browser Hijacker என்று குறிப்பிடுவார்கள்.
படத்தைப் பார்க்க. 
இது சாதாரணமாக உங்கள் பிரௌசர் செட்டிங்சை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் அதில் விளம்பரங்களை காட்டும்.

நீங்கள் என்னதான் பிரௌசர் செட்டிங்சை Manual ஆக மாற்றினாலும் இந்த Do Search ஹைஜாக்கிங் நிரல்கள் போகவே போகாது.

அதேபோல் பிரௌசர் செட்டிங்சை ரீசெட் செய்தாலும் கூட.. பிரௌசரை மூடிவிட்டு, மீண்டும் பிரௌசரைத் திறக்கும்பொழுது Do Search தோன்றும். 
இது ஒரு ஆட்டவேர்-மால்வேர். இதை எப்படி கூகிள் குரோம் பிரௌசர் உட்பட  உங்கள் கணினியில் உள்ள அனைத்து பிரௌசர்களிலிருந்தும் நீக்குவது என்பதைப் பார்ப்போம். 
இதுபோன்ற மால்வேர், ஆட்வேர் வைரஸ்களை நீக்குவதற்கு Adwcleaner என்ற மென்பொருள் பயன்படுகிறது. 
இந்த மென்பொருளை இந்த இணைப்பில் சொடுக்கி நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
சுட்டி: Download Adwcleaner

நேரடியாக டவுன்லோட் செய்ய இணைப்புச் சுட்டி: Direct Download Adwcleaner

(இத்தளத்தில் முகப்பு பக்கத்திலேயே Adwcleaner மென்பொருள் தரவிறக்க இணைப்பு இருக்கும். )
இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து ஸ்கேன் என்பதை கிளிக் செய்யவும். 
ஸ்கேனிங் செய்து முடித்தவுடன் உங்கள் கணனியில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஃபயர்பாக்ஸ், கூகிள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இணைய உலவிகளில் அனைத்து மால்வேர், ஆட்வேர்களும் வரிசைப்படுத்தப்பட்டு காண்பிக்கப்படும். 
பிறகு delete என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் உங்கள் கணினியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து Adware களும் நீக்கப்பட்டுவிடும். 
நன்றி.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here