android ல் இருந்து அமெரிக்கா, கனடாவிற்கு இலவச அழைப்பை மேற்கொள்வது எப்படி? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 8, 2013

android ல் இருந்து அமெரிக்கா, கனடாவிற்கு இலவச அழைப்பை மேற்கொள்வது எப்படி?



உலகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியில் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு படைப்புகள் மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த வகையில் இப்போது யார் பேச்சைக் கேட்டாலும் அன்ரோயிட் பற்றியே பேச்சாக இருக்கிறது. குறுகியதொரு காலப்பகுதியில் அன்ரோயிட் பெற்ற மிகப்பெரிய வளர்ச்சி ஆச்சரியமானதே.
 பலருக்கு இந்த வகை போன்களில் பரீட்சையம் இல்லாததால் பல சலுகைகளைத் தவற விட்டு விடுகின்றார்கள்.
அமெரிக்கா, கனடாவிற்கு android ல் இருந்து இலவச அழைப்பை மேற்கொள்வதற்காக நீங்கள் Talkatone என்ற இந்த அப்ளிகேசனை நிறுவிக் கொண்டாலே போதும். இந்த சேவை முற்றுமுழுதாக இலவசமானது. ஆனால் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு மாத்திரமே இந்த சேவை. நீங்கள் எந்த நாட்டில் இருந்தும் அழைப்புக்களை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த இரு நாடுகளுக்கு மட்டுமே அழைக்கலாம்.
அழைப்பு மாத்திரமன்றி இலவச SMS சேவையையும் வழங்குகிறது. அதோடு பேஸ்புக் அல்லது கூகிள் கணக்கை உபயோகித்து Log in பன்ணுவதன் மூலம் நண்பர்களோடு சாட் பண்ணும் வசதி, Stauts, புகைப்படங்கள் போன்றவற்றை Facebook, Google போன்றவற்றில் பகிர்ந்துகொள்ளும் வசதி போன்றவற்றையும் தருகிறது.
 
அதேவேளை இந்த Application அன்ரோயிட் இற்கு மாத்திரமல்லாது Apple iOs (iPhone, iPad) இற்கும் கிடைக்கிறது.

தங்களிடம் ஒரு கூகுள் கணக்கு ஒன்று இருத்தல் கட்டாயமாகும். நிறுவிக் கொண்ட பின் தங்கள் கூகிள் கணக்கினுள் உள் நுழைந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் தாங்கள் அழைக்க விரும்பும் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.
Application இற்கான இணைப்பு
Android : Talkatone
Apple    :  Talkatone

Post Top Ad

Responsive Ads Here