நான் வைத்திருப்பது அசெம்பிள் கம்ப்யூட்டர் தான்.. Hardware Engineer ஆன எனது நண்பர்கள் எனக்கு பல்வேறு பாகங்களை வாங்கி, ஒரு அருமையான கணினியை உருவாக்கித் தந்தார். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Mother Board நிறுவனத்தின் பெயர் ASUS.சரி.. கணினி அசெம்பிள் செய்ய முக்கியமாக என்னென்ன பாகங்கள் வேண்டும்?
(What should be important to the assembly of computer parts?)
முதலில் computer case என்று சொல்லக்கூடிய நல்ல கேபின் வாங்க வேண்டும்.
அதற்கடுத்து அதில் பொருத்துவதற்கு உண்டான அனைத்து ஹார்ட்வேர்களையும் வாங்க வேண்டும்.
குறிப்பாக நல்ல நிறுவனத்தினுடைய
1. Mother Board.
![]() |
| மதர் போர்டு |
2. processor
![]() |
| Processor |
3. RAM (Random Access Memory)
![]() |
| RAM - RANDOM ACCESS MEMORY |
4. Hard Disk (இது ரொம்ப முக்கியம்)
5. DVD Drive
6. IDE-SATA Cables
7. Monitor
(இதில் சில வகைகள் இருக்கிறது. அவை: CRT Monitor, LCD monitor, Plasma monitor, SED monitor போன்றவை. தற்போது LCD, Plasma வகை மானிட்டர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.)
8. VGA Cable
(இந்த கேபிள்தான் Monitor, CPU ஆகியவற்றை இணைக்கும்)
9. Power Cable
இரண்டு. CPU , Monitor ஆகியவற்றிற்கு மின்சார இணைப்புக்கொடுக்க
10. Mouse - Keyboard
![]() |
| mouse-keyboard |
11. Speaker
12. OS CD Original (windows 7, windows 8, windows xp, windows vista)இவற்றில் ஏதாவது ஒரு Operation System மென்பொருள்.(os cd ரொம்ப முக்கியம்)
13. Head Set (தேவைப்படின்)
![]() |
| Head Set |
இவற்றை அனைத்தையும் வாங்கி முறையாக ஒன்றிணைத்து ஒரு மணி நேரத்திலேயே கணினியை இயங்க வைக்கலாம். OS போடுவதற்கு சிறிது நேரம் எடுக்கும். எப்படியிருந்தும் இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் உங்கள் கணினியை உருவாக்கி அதில் நீங்கள் வேலை செய்ய முடியும்.
இவற்றிலுள்ள நன்மைகள்:
(Benefits of Assembled Computer)
1. செலவு குறைவு.. பகுதிப் பொருட்களை நாமே வாங்குவதால் பார்த்து நல்லதாக தேர்ந்தெடுக்க முடியும்.
2. குறைந்த நேரத்தில் கணினியை இயக்கிப் பார்க்கும் வசதி.. கணினியில் ஏதேனும் பழுது என்றால் முடிந்த வரை நாமே அதைத் தீர்க்க முயற்சிக்கலாம்.
3. Ram, மற்றும் Fan ஆகியவற்றை தூய்மைப்படுத்துவது எளிதாக இருக்கும்.
4. ஏதேனும் பிரச்னை என்றால் துணிந்து அதில் கை வைக்கலாம். நம்மால் முடியாத சூழ்நிலை கணினி சரிசெய்பவரை அழைத்துக்கொள்ளலாம். பிராண்டட் கம்பெனி கம்ப்யூட்டர்களில் இவ்வாறு செய்ய முடியாது. காரணம் சர்வீஸ் சென்டர்களில் கொண்டுபோனால் இலவச சர்வீஸ் செய்யமாட்டார்கள். கணினியை திறக்காம் சீல் வைத்தப்படி அப்படியே இருந்தால் தான் இலவச சர்வீஸ் கிடைக்கும்.
5. ஏதாவது பழுது என்றால் உடனே மாற்றுப் பொருள் வாங்கி பொருத்தி செயல்படுத்தலாம். ஒரு கணினியிலுள்ள பொருளை எடுத்து இயங்காத கணினிக்குப் பொருத்தி சரிபார்த்துக்கொள்ளும் வசதி. உதாரணமாக SMPS போய்விட்டது என்றால் அதை கழற்றிவிட்டு வேறொரு SMPS -ஐ மாற்றி சோதனை செய்து பார்க்கலாம்.
6. மின்விசிறி இல்லாத இடத்தில் கூட வைத்து பயன்படுத்தலாம். கேபின் உள்ளே நல்ல காற்றோட்டமான இடைவெளி இருப்பதால் சூடேறுவது குறையும். இதனால் கணினியின் பாகங்கள் கெட்டுப்போக வாய்ப்புகள் குறைவு..
சராசரி பொருளாதார சூழ்நிலைகள் கொண்டவர்களுக்கு இந்த அசெம்பிள் கம்ப்யூட்டரே பொருத்தமானது.


.jpg)










No comments:
Post a Comment