OpenKm எனும் மின் ஆவணங்களை நிருவகிக்கும் கருவி - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, October 30, 2013

OpenKm எனும் மின் ஆவணங்களை நிருவகிக்கும் கருவி

எந்தவொரு நிறுவனத்திலும் மின் ஆவணங்களை நிருவகிப்பது என்பது மிக சிக்கலான செயலாகும் ஏனெனில் ஒருவர் எக்செல் கோப்பினையும் மற்றொருவர் அக்சஸ் கோப்பினையும் பிரிதொருவர் பவர் பாயின்ட் கோப்பினையும் மற்றொருவர் வேர்டு கோப்பினையும் பயன்படுத்தி வருவார்கள்
இவைகளுள் சிலர் எம்எஸ்ஆஃபிஸ்2003 பதிப்பிலும் வேறுசிலர் எம்எஸ்ஆஃபிஸ்2007 பதிப்பிலும் மற்றும் சிலர் எம்எஸ்ஆஃபிஸ் 2010 பதிப்பிலும் என இதனுடைய பல்வேறுவகையான பதிப்புகளிலும் இன்னும் சிலர் ஓப்பன் ஆஃபிஸ் என்றவாறு பல்வேறுவகையில் பயன்பாடுகளையும் செயல்படுத்தி பயன்படுத்தி வரும் நிலையில் இந்த ஆவணங்களின் பெயர் அவை இருக்கும் நினைவக இடம் அவைகளின் பதிப்பு எண் போன்றவைகளை நினைவில் இருத்தி கொண்டு இந்த மின் ஆவணங்களை நிருவகிப்பது என்பது மிகசிக்கலானதும் கடினமானதும் ஆன பணியாகும் இவ்வாறான நிலையில் OpenKMஎன்பது இணையத்தில் இந்த ஆவணங்களை நிருவகிப்பதற்கான மிகச்சிறந்த திறமூல கருவியாக விளங்குகின்றது இதனை இயக்கி பயன்படுத்திகொள்ள jBossஎன்ற இணையசேவையாளரை(web server) இது பயன்படுத்தி கொள்வதால் இதற்கென தனியான இணையசேவையாளர்(web server) எதுவும் நமக்குத் தேவையில்லை ஆயினும் JDK 1.6என்பது மட்டும் நம்முடைய கணினியில் நிறுவபட்டுள்ளதாவென உறுதிபடுத்திகொள்கபின்னர் http://localhost:8080/OpenKM/என்ற முகவரியில் இதனை அனுகி run.sh -b 0.0.0.0என்ற வாறு கட்டளைகளை இயக்குவதன் மூலம் இதனை செயல்படுத்தலாம்
இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தினை நாம் அனுகுவதற்கான இயல்புநிலை பயனாளர் OkmAdminபெயர் கடவுச்சொற்கள்admin ஆகும் இதனை பயன்படுத்தி இதில் உள்நுழைவு செய்தபின் நம்மை பற்றிய விவரங்களை இதனுடைய Administration என்ற தாவியினுடைய திரையில் profileஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்துசொடுக்கி உள்ளீடு செய்து நமக்கென தனியாக இடத்தை ஒதுக்கீடு செய்து கொள்க பின்னர் profileஎன்ற உருவ பொத்தானிற்கு அருகிலுள்ள usersஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் users listஎன்ற திரைக்கு நம்மை அழைத்து செல்லும் அங்கு add usersஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி புதிய பயனாளர் விவரங்களை users details என்ற பகுதியில் உள்ளீடு செய்து சேர்த்து கொள்க இவ்வாறு users list -ல் சேர்க்கும் ஒவ்வொரு பயனாளரும் என்னென்ன பணியினை செய்யமுடியும எனக்குறிப்பிடுவதற்கு Rolesஎன்ற பக்கத்தில் குறிப்பிடுக.
இதன் பின்னர் அனைத்து வகையான ஆவணங்களையும இந்த தளத்தில் மேலேற்றிய பின் ஏதேனுமொரு ஆவணத்தை தெரிவுசெய்து Security என்ற தாவியனுடைய திரைக்கு சென்று அதன் தனித்தன்மை அந்த ஆவணத்தை பயன்படுத்தும் பயனாளரினுடைய Roles ஆகியவற்றை அறிந்து தேவையானால் இந்த Rolesஐ மாற்றியமைத்து கொள்ளமுடியும் இதன்பின்னர் பயனாளர் தம்முடைய ஆவணத்தில் மாறுதல் ஏதேனும் செய்தால் admin மூலம் என்ன திருத்தம் எப்போது செய்யபட்டது என்பன போன்று அறிந்து கொள்ளமுடியும் ஒரேசமயத்தில் admin உம் பயனாளரும் ஒரே ஆவணத்தை பார்வையிட்டு சரிபார்த்து தேவையெனில் திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யமுடியும் அதனை தொடர்ந்தும் அந்த ஆவணத்தின் பதிப்பையும் சரிபார்த்து நிருவகிக்கமுடியும் குறிப்பிட்ட ஆவணம் சரியாக உள்ளது பயனாளர் இதற்கு பிறகு திருத்தம் செய்யதேவையில்லை எனில் அதனை lockசெய்துவிடலாம்
இந்த OpenKmஆனது ஆவணங்களை நிருவகிப்பதற்கு மட்டுமன்று அந்த நிறுவனத்தி னுடைய workflow ,mails,chat போன்றவைகளையும் நிருவகிக்க துனைபுரிகின்றது

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here