ஜிமெயிலில் வேறொரு நபர் நமக்குபதிலாளாக நம்முடைய பிரதிநிதியாக இருந்து நமக்கு வரும் மின்னஞ்சலை படித்திடவும் பதில்அனுப்பிடவும் நீக்கம் செய்திடவும் இந்த delegation என்ற வசதி அனுமதிக்கின்றது. அதாவது ஒரு குடும்பத்தலைவரின் மின்னஞ்சல்பெட்டியை மற்ற குடும்ப உறுப்பினர்களும் ,அவ்வாறே ஒரு நிறுவனத்தின் தலைமை நிருவாகியின் மின்னஞ்சல் பெட்டியை மற்ற துனைத்தலைமை அல்லது துறைத்தலைவர்களும் கையாளுவதற்கு அனுமதிக்கின்றது ஆனால் இந்த வசதியானது இவ்வாறான பதிலாளை கலந்துரையாடல் செய்யவோ மின்னஞ்சல் கணக்கின் அமைவையும் கடவுச்சொல்லையும் மாறுதல் செய்யவோ அனுமதிக்காது.
.இதற்காக நம்முடைய மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொள்க.பின்னர் மேலே வலதுபுற மூலையிலுள்ள gear என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் கீழிறங்கு பட்டியில் Mail Settings என்ற (படம்-1) கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.
.இதற்காக நம்முடைய மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொள்க.பின்னர் மேலே வலதுபுற மூலையிலுள்ள gear என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் கீழிறங்கு பட்டியில் Mail Settings என்ற (படம்-1) கட்டளையை தெரிவு செய்து சொடுக்குக.
பின்னர்தோன்றிடும் Settings என்ற(படம்-2) திரையில் Accounts and Import என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
அதன் பின்னர் விரியும் Accounts and Import என்ற(படம்-3) தாவியின் திரையில் Grant access to your account என்ற பகுதியை தேடிபிடிக்கவும் பின்னர் அதற்கு அருகிலுள்ள Add another accountஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
பிறகு தோன்றிடும் Grant access to your account என்ற (படம்-4)திரையில் E-mail address என்பதற்குஅருகிலுள்ள உரைபெட்டியில் நம்முடைய மின்னஞ்சலை கையாளுவதற்கு அனுமதிப்பவருடைய மின்னஞ்சல் முகவரியைதவறின்றி தட்டச்சு செய்து Next Step என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக
அதன்பிறகு தோன்றிடும் Are you sure என்று (படம்-5)உறுதிசெய்யும் படி கோரும் திரையில் Send email to grant access. என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் Nett has granted you access to their Gmail account – accept or deny? என்றவாறு மின்னஞ்சல் கையாளும் உரிமையை மற்றவர்களுக்கு அனுமதிக்கின்றோமா என்ற (படம்-6)கோரிக்கைக்கு accept ,acceptஎன்று படத்திலுள்ளவாறு ஆமோதித்திடுக.
அவ்வாறு நாம் ஆமோதித்தவுடன் நாம் அனுமதி அளித்தவருடைய மின்னஞ்சலின் பெயருடன் இந்த மின்னஞ்சலின் பெயரும் பட்டியலாக (படம்-7)வீற்றிருக்கும் இதன்பிறகு அவ்வாறு பரிந்துரை செய்தவர் Switch account என்ற பொத்தானை சொடுக்கி நம்முடைய மின்னஞ்சலை கையாளமுடியும்
இவ்வாறான அனுமதியை தேவையில்லையெனில் Settingsஎன்பதனுடைய Accounts and Imports என்ற தாவியின்திரைக்கு சென்று இந்தஅனுமதியை நீக்கம் செய்துவிடமுடியு
No comments:
Post a Comment