ஆயிரம் கோடி டவுன்லோடை .......... - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 20, 2013

ஆயிரம் கோடி டவுன்லோடை ..........



ஆப்பிளுக்கு போட்டியாக கூகுள் ஆரம்பித்த Android ஓபன் சோர்ஸ் மென்பொருள் இப்பொழுது பரவலாக அனைத்து மொபைல்களிலும் உபயோகப் படுத்தப்படுகிறது. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் போன்று Android நிறுவனமும்  Android Market என்ற தளத்தை உருவாக்கி Android மொபைல்கள் மற்றும் Tablet கணினிகளில் உபயோகப்படுதக்கூடிய அப்ளிகேஷன்களை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் கட்டன மென்பொருட்கள் மற்றும் இலவச மென்பொருட்கள் அனைத்து மென்பொருட்களும் தரவிறக்கி கொள்ளலாம்.  இப்பொழுது அந்த தளத்தின் டவுன்லோட் செய்யப்பட மென்பொருட்களை எண்ணிக்கை ஆயிரம் கோடியை தாண்டி விட்டதாக கூகுள் நிறுவனம் அதன் பிளாக்கில் தெரிவித்து உள்ளது.


ஒவ்வொரு மாதமும் 1 பில்லியன் மென்பொருட்கள் டவுன்லோட் என்ற வளர்ச்சி விகிதத்தில் சென்று தற்பொழுது டவுன்லோட் எண்ணிக்கை 10 பில்லியன் (ஆயிரம் கோடி) எண்ணிக்கையை தொட்டு உள்ளது. 

இந்த சந்தோசமான தருணத்தை கொண்டாட கூகுள் தளம் ஒரு புதிய சலுகையை வாசகர்களுக்கு வழங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும்  10 மென்பொருட்களை சலுகை விலையாக வெறும் 10 சென்ட் விலையில் ஒவ்வொரு மென்பொருட்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த சலுகை பத்து நாட்கள் நடைமுறையில் இருக்கும்.

Android மென்பொருட்களை டவுன்லோட் செய்ய நினைப்பவர்கள் இந்த சலுகை நாட்களில் மென்பொருட்களை டவுன்லோட் செய்து உங்கள் மொபைல்களில் பயன்படுத்தி கொள்ளுங்கள். 

Post Top Ad

Responsive Ads Here