சியோமியின் சமீபத்திய முதன்மை பிரீமியம் ஸ்மார்ட்போனான Mi 10 இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது - ஆயிரம் அறிவோம்

Post Top Ad

Wednesday, June 3, 2020

சியோமியின் சமீபத்திய முதன்மை பிரீமியம் ஸ்மார்ட்போனான Mi 10 இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது

mi 10 1 1024x512 - 108MP  கேமராவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது  Mi 10!!


சியோமியின் சமீபத்திய முதன்மை பிரீமியம் ஸ்மார்ட்போனான  Mi 10 இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது

சியோமியின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் Mi 10 ஐ அறிமுகப்படுத்துவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. கோவிட் -19 தொற்றுநோயால் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதற்கு தாமதமானது. தற்போது சில பகுதிகளில் லாக்டோவ்ன்  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சியோமி இறுதியாக இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

தற்சமயம்  சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.முன்னதாக ஷியோமி இந்த ஆண்டின் தொடக்கத்தில்,  Mi  மற்றும் ரெட்மியை துணை பிராண்டுகளாக அறிவித்தது, தொலைபேசி சந்தையின் பிரீமியம் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வந்தது. அதன் விளைவாக இந்த ஸ்மார்ட்போன்  பிரீமியம் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

mi 10 1 1024x512 - 108MP  கேமராவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது  Mi 10!!

விவரக்குறிப்புகள்:

  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 865  பிராசஸர்
  • 6.67  இன்ச் 3D Curved E3 AMOLED full HD+ டிஸ்ப்ளே HDR 10+  சப்போர்ட்
  • 8 ஜிபி ரேம் மற்றும்128 ஜிபி வரை மெமரி/8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி
  • MIUI 11
  • டூயல் சிம் ஸ்லாட்
  • பின்பக்க கேமரா : 108-megapixel பிரைமரி( (1/1.33-inch sensor, 7P lens, 1.6um, Super Pixel, OIS) + 2-megapixel  டெப்த் சென்சார் (f/2.4, 1.75um), + 2-megapixel மேக்ரோ சென்சார்  (f/2.4, 1.75um),+ 13-megapixel அல்ட்ரா வைடு சென்சார்(f/2.4, 1.12um, and 123-degree field of view).
  • இது 8 K  வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் புரோ-லெவல் வீடியோ ரெக்கார்டிங்கிற்கான மோட்களுடன்(modes)  வருகிறது.
mi 10 2 1024x512 - 108MP  கேமராவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது  Mi 10!!
  • முன்பக்க கேமரா : 20-megapixel  செல்ஃபி கேமரா
  • USB Type-C port
  • ப்ளூடூத் v5.1, 5G
  • 4G LTE, வைஃபை 6 சப்போர்ட் மற்றும் யுஎஸ்எஃப் 3.0 ஸ்டோரேஜ்.
  • 4,780 எம்.ஏ.ஹெச். பேட்டரி,30W வேகமான சார்ஜிங் சப்போர்ட் (வயர்டு மற்றும் வயர்லஸ் ) ,ரிவர்ஸ்  வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்  (10W) உடன் வருகிறது.
  • எடை :208 கிராம் 

Mi 10  – 8 ஜிபி/128 ஜிபி மாடலின் விலை ரூ .49,999. 8 ஜிபி/56 ஜிபி மாடலின் விலை ரூ .54,999. ஸ்மார்ட்போனை  முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்காக சியோமி 30W வயர்லெஸ் சார்ஜரை தொகுக்கிறது. இவ்விரு மாடல்களும் Coral Green  மற்றும் Twilight Grey  நிறங்களில் வருகின்றன.

இந்த ஸ்மார்ட்போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் அமேசான் மற்றும் மி.காம் வலைதளங்களில் தொடங்குகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad