ஐபோனின் ஆயுட் காலம் இவ்வளவுதான்..? ஆப்பிள் நிறுவனம் தெரிவித்த்துள்ளது..! - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Monday, April 18, 2016

ஐபோனின் ஆயுட் காலம் இவ்வளவுதான்..? ஆப்பிள் நிறுவனம் தெரிவித்த்துள்ளது..!



ஐபோனின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என்று அப்பிள் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
அப்பிள் நிறுவனத் தயாரிப்புகளின் ஆயுட்காலம் குறித்து விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அப்பிள் ஸ்மார்ட் கடிகாரங்களின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என்றும், அப்பிள் தொலைக்காட்சியின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அப்பிள் நிறுவனம், தங்களது தயாரிப்புகளில் பெரும்பாலானவை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகள் தொடர்பில் நீண்டநாட்களாக சர்ச்சை நிலவு வருகின்றது. பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் ஒரு ஐபோன் வெளியிடப்பட்டு பின்னர் அடுத்த மேம்படுத்தப்பட்ட ஐபோன் வெளியானதும் , முன்னைய தயாரிப்பின் செயல்பாட்டு வேகம் குறைவதாக நீண்ட நாட்களாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அப்பிள் தனது தயாரிப்புகளின் ஆயுட்காலத்தை வெளியிட்டுள்ளது. 

Post Top Ad

Responsive Ads Here