LG மொபைல் அறிமுகம் - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 12, 2014

LG மொபைல் அறிமுகம்


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட G Flex Curved Display ஸ்மார்ட்ஃபோனை எல்ஜி இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை சுமார் எழுபதாயிரம் ரூபாய்!
இந்தியாவுக்கு இது ரொம்ப அதிகமாச்சே!
உண்மைதான். ஐஃபோன், காலக்ஸி நோட் 3, HTC One Max போன்ற விலை மிகுந்த ஃபோன்களின் பட்டியலில் இது சேர்கிறது!
இந்த ஃபோனில் ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஆபரேட்டிங் சிஸ்டம் இருக்கும். Quad-core 2.26 GHz Snapdragon 800 (MSM8974) ப்ராசஸர், Adreno 330 GPU, 2 ஜிபி RAM, இரண்டு கேமெராக்கள், 3500 mAh பேட்டரி கொண்ட இந்த ஃபோனின் எடை 177 கிராம், தடிமன் 7.9 மில்லிமீட்டர் முதல் 8.7 மில்லிமீட்டர்வரை!
இதன் வளைந்த திரை, OLED Panel தொழில்நுட்பத்தால் ஆனது. நீடித்து உழைக்கக்கூடியது. இதில் படங்கள் மிகப் பிரகாசத்துடன், மிகத் துல்லியத்துடன் தெரியும்!
இன்னொரு விசேஷம், இதன் பின் பகுதியில் ஏதேனும் கீறல்கள் ஏற்பட்டால், அவை தானே சரியாகிவிடும். இதுவும் பெரிய பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.
‘இந்த ஃபோனில் வாடிக்கையாளர்கள் பெறப்போகும் அனுபவம் பலமடங்கு சிறந்ததாக இருக்கும்’ என்கிறார் எல்ஜி இந்தியா தலைவர் சூன் க்வான். ‘மிகவும் சவுகர்யமான ஃபோன் இது, ஒலித் துல்லியமும் அருமையாக இருக்கும். மக்கள் இதனை நிச்சயம் ரசிப்பார்கள்!’

Post Top Ad

Responsive Ads Here