Firefox Launcher ஆண்ட்ராய்டுக்கு வருகிறது - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 8, 2014

Firefox Launcher ஆண்ட்ராய்டுக்கு வருகிறது


Mozilla நிறுவனம் விரைவில் தனது Firefox லாஞ்சரை ஆண்ட்ராய்டில் வெளியிட இருக்கிறது. இந்த விவரம் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற InContext கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.
இதற்காக, அந்நிறுவனம் இஸ்ரேலைச் சேர்ந்த EverythingMe என்ற நிறுவனத்துடன் கை கோத்துள்ளது. ‘EverythingMeயின் Contextual content discovery engine உடன் இணைந்து இந்தப் புதிய தயாரிப்பு எல்லாரையும் கவரும்’ என்கிறார் மோஜில்லா மொபைல் பிரிவுத் துணைத் தலைவர் ஆண்ட்ரியாஸ் கால்.
இந்த அப்ளிகேஷன் EverythingMeயின் adaptive searchஐ ஃபயர்ஃபாக்ஸின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனுடன் இணைத்து நன்கு Customize செய்யக்கூடிய home screenஐ வழங்கும். இதில் உள்ள prediction bar அப்போதைய நேரம், நீங்கள் இருக்கும் இடம், நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும் விதம் போன்றவற்றை அலசி ஆராய்ந்து, நீங்கள் பயன்படுத்த விரும்பக்கூடிய நான்கு அப்ளிகேஷன்கள் எவை என்று கண்டறியும். இதுதவிர, அப்ளிகேஷன்களைப் பயனாளர்களின் ஆர்வத்துக்கு ஏற்றபடி பிரித்துக் காண்பிக்கக்கூடிய Smart Folders வசதியும் இதில் உண்டு.
‘பயனாளர்களை எதுவும் கேட்காமல், அவர்கள் விரும்புவதை விரைவாகக் கண்டறிய நாங்கள் விரும்புகிறோம்’ என்றார் EverythingMe நிறுவனர்களில் ஒருவரான அமி பென் டேவிட். ஆனால் இந்த அப்ளிகேஷன் எப்போது வெளியாகும் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.

Post Top Ad

Responsive Ads Here