உலகின் கேவலமான Password'கள் - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 5, 2014

உலகின் கேவலமான Password'கள்

Computer பயன்படுத்துபவர்கள் குறிப்பாக E-mail பயன்படுத்துபவர்கள் தங்களது கணக்குகளை பயன்படுத்த Password எனப்படும் கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது அவசியம்.
இந்த Passwordகள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் Passwordகள் என்ன என்று ஆராயப்பட்டது.
இதில் `123456′ என்ற எண்கள் தான் அதிக அளவில் Passwordடாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக Password என்ற பெயரே அதிக அளவில் Passwordடாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் தங்களது முதல் பெயர் மற்றும் ஒரே சொல்லை பலமுறை பயன்படுத்துவது ஆகியவையும் அதிக அளவில் Passwordடாக பயன்படுத்துகின்றனர்.
`bond007′, `cocacola’ போன்ற சொற்கள் அதிக அளவில் Passwordடாக பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
முதல் 10 இடங்களில் உள்ள Passwordகளை ஒன்பதில் ஒருவரும், முதல் இருபது இடங்களில் உள்ள Password பட்டியலில் உள்ளவற்றை 50ல் ஒருவரும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு நபர் அதிக பட்சமாக 15 Passwordகள் வரை நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்றும், 61 சதவிகிதம் பேர் பல்வேறு கணக்குகளுக்கும் ஒரே Passwordடை வைத்துக் கொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது

Post Top Ad

Responsive Ads Here