உலகில் அதிகம் பாவனையாளர்களை கொண்ட தளம் பேஸ்புக் என்பதை அனைவரும் அறிவோம். ஏகப்பட்ட மக்களை நாடுவாரியாக தன் பக்கம் குவித்து ஒரு பிரமாண்ட வலையமைப்பாக உருவெடுத்து இருக்கிறது இந்த பேஸ்புக்.
சரி எத்தனையோ பேர் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சரி ஒன்றை மறந்துவிட்டோமா?
அதாங்க பேஸ்புக்கை பயன்படுத்தும் பயனாளர் இறந்து விட்டால்? அதற்க்கு ஏதும் வழிகள் பேஸ்புக் வைத்து இருக்கிறதா?
ஆம். அது என்னவென்று தான் இன்றைய தினம் நாம் பார்க்க இருக்கிறோம் . (இது புதியவர்களுக்காக மட்டுமே)
பேஸ்புக்கில் இதற்க்கு இரு வழிமுறைகள் வைத்து இருக்கிறார்கள்.
1. ஆதாரத்துடன் இறந்த உங்கள் மனைவி/ பிள்ளைகள்/ அம்மா / அப்பா / நண்பர்கள் / உறவினர் / சக உதவியாளர் விபரங்களை நீங்கள் சமர்பிப்பதன் மூலம் நீங்கள் பேஸ்புக் ப்ரோபைலை அளிக்க முடியும்.
2. அல்லா விடின் ஆதாரத்துடன் இறந்த உங்கள் மனைவி/ பிள்ளைகள்/ அம்மா / அப்பா / நண்பர்கள் / உறவினர் / சக உதவியாளர் விபரங்களை நீங்கள் சமர்பிப்பதன் மூலம் நீங்கள் பேஸ்புக் ப்ரோபைலை ஞாபகார்த்த பக்கமாக மாற்ற முடியும்.
உங்கள் விருப்பபடி ஆப்சனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆகவே அந்த இரண்டு முறைகளையும் எப்படி செய்வது என்று நாம் பார்க்கலாம்.
1. பேஸ்புக் பக்கத்தை முழுவதுமாக நீக்க
இதற்க்கு கண்டிப்பாக தேவையான ஆதாரங்கள்
- பிறப்பு சான்றிதழ்
- இறப்பு சான்றிதழ்
- அதிகாரம் உடைய ஒருவருடைய உறுதிபடுத்தல் பிரதி
இந்த லிங்க் மூலமாக செல்வதன் மூலமும், சரியான ஆதாரங்களை சமர்பிப்பதன் மூலமும் இறந்த ஒருவருடைய பக்கத்தை முழுமையாக நீக்க முடியும்
2. பேஸ்புக் ஞாபகார்த்த பக்கம்
இதுவே இப்போதிய சூழ்நிலையில் அதிகம் உபயோகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்க்கு இறந்ததற்கு ஒரு ஆதாரத்தை சமர்ப்பித்தலே போதுமானதாய் இருக்கிறது.
இந்த லிங்க் மூலமாக செல்வதன் மூலமும், சரியான ஆதாரங்களை சமர்பிப்பதன் மூலமும் இறந்த ஒருவருடைய பக்கத்தை ஞாபகார்த்த பக்கமாக ஆக்க முடியும்