AVAST ANTI VIRUS - ANDROID - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 4, 2014

AVAST ANTI VIRUS - ANDROID

அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணினிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து கணினியை பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும். கணினி உலகில் சிறந்த இடத்தை தக்க வைத்துள்ள இந்த ஆன்டிவைரஸ் மென்பொருள் இப்பொழுது மொபைல் உலகிலும் கால் வைத்துள்ளது. முதலாவதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை ஆன்ராய்ட் மொபைல்களுக்காக வெளியிட்டுள்ளது அவாஸ்ட் நிறுவனம். இந்த புதிய ஆன்ராய்ட் ஆன்டிவைரஸ் மென்பொருளில் பல்வேறு வசதிகள் உள்ளது.


மென்பொருளில் உள்ள வசதிகள்:
  • Antivirus Production- Real time Production, Custom Updates
  • Web Shield
  • Call / SMS filter
  • Anti-Theft Features - Remote Lock, Remote memory wipe, sim card change notification, Remote siren
  • Firewall
  • Application Manager
இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளது அனைத்தும் இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம். 
கீழே மற்ற மென்பொருட்களுக்கும் அவாஸ்ட் மென்பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளில் இல்லாத வசதிகள் கூட இந்த ஆன்ராய்ட் அவாஸ்ட் ஆன்ட்டி வைரஸ் மென்பொருளில் உள்ளது. இந்த மென்பொருள் செயல் படும் விதத்தை விளக்கும் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

இந்த மென்பொருளை Avast for android இந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். கணினியில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்யும் பொழுது உங்கள் கணினியோடு உங்கள் ஆன்ராய்ட் மொபைல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது உங்கள் மொபைலில் www.avast.com/android என்ற தளத்திற்கு சென்று டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். 

Post Top Ad

Responsive Ads Here