பேஸ்புக் டேக்கை நீக்குவது பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா? அது கொஞ்சம் கடினமான வழி. அதைவிட எளிய வழியை தற்போது பார்ப்போம்.
நீங்கள் ஏதாவது பதிவிலோ, புகைப்படங்களிலோ Tag செய்யப்பட்டிருந்தால் அவைகள் உங்கள் பேஸ்புக் டைம்லைனில் தெரியும். அங்கிருந்தே எளிதாக நீக்கலாம்.
அந்த பகிர்வின் மேலே வலதுபுறம் Edit பட்டனை க்ளிக் செய்தால் மேலே உள்ளது போன்று வரும். அதில் "Hide from Timeline" என்பதை க்ளிக் செய்தால்
அந்த படம் உங்கள் பக்கத்திலோ, உங்கள் நண்பர்கள் பக்கத்திலோ தெரியாது.
Report/Remove Tag என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.

அதில் "I want to untag myself" என்பதை தேர்வு செய்யுங்கள். அந்த படம் பேஸ்புக்கில் இருப்பதை விரும்பவில்லை என்றால் இரண்டாவதையும் தேர்வு செய்யுங்கள். பிறகு Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! உங்கள் பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுவிடும். பிறகு Okஎன்பதை க்ளிக் செய்யுங்கள்.
நன்றி: இந்த பதிவிற்காக, சிரமம் பார்க்காமல் என்னை டேக் செய்த நண்பர்திடங்கொண்டு போராடு சீனு அவர்களுக்கு நன்றி!