எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது..
இதற்கு எக்ஸலில் உள்ள Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய வடிவம்) {=DATEDIF(Date1, Date2, OutputRequirement)} எனும் ஒழுங்கிலேயே வழங்க வேண்டும். OutputRequirement எனுமிடத்தில் மேற்கோள் குறிகளுக்கிடையே “Y” என வழங்கும் போது வருட வித்தியாசத்தையும் “M” என வழங்கும்போது மாதங்களின் வித்திய்சாத்தையும் “D” என்பது நாட்களின் வித்தியாசத்தையும் தரும். இங்கு திகதி1 ஐ விட திகதி2 பெரிதாக இருக்க வெண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்..
உதாரணமாக 8/8/1990 எனும் திகதிக்கும் 13/05/2008 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை வருடங்கள் உள்ளன? எத்தனை நாட்கள் உள்ளன? எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட முதலில் எக்ஸல வர்க் சீட்டில் B3 எனும் செல்லில் 08/08/1990 எனும் திகதியையும் B4 எனும் செல்லில் 13/05/2008 எனும் திகதியையும் உள்ளீடு செய்யுங்கள்.. திகதியை உள்ளீடு செய்யும்போது உங்கள் கணினியில் திகதி உள்ளீடு செய்யும் வடிவத்தையும் (Date format) கவனத்திற் கொள்ள மறந்து விடாதீர்கள் அனேகமாக் விண்டோஸில் MM/DD/YYYY (மாதம் /திகதி/வருடம்) எனும் திகதி வடிவமே இயல்பு நிலையில் இருக்கும்
அடுத்து இரண்டு திகதிகளுக்கிடையிலுள்ள வருட வித்தியாசத்தைக் கண்டறிய B6 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”Y”) எனும் சமன்பாட்டை டைப் செய்யுங்கள். விடையாக 17 (வருடங்கள்) வரக் காணலாம். அதேபோல் இரண்டு திகதிகளுக்கிடையேயுள்ள மாதங்களின் எண்ணிக்கையைக் காண B7 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”M”) எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”D”) எனவும் வழங்குங்கள்.
இன்னும் சற்று மாறுதலாக இன்றைய திகதிக்கு உங்கள் வயது என்ன என்பதைக் கண்டறிய வேண்டுமானால் மேற் சொன்ன சமன்பாட்டில் சிறிய மாற்றத்தைச் செய்ய வெண்டும்.
உதாரணமாக B2 எனும் செல்லில் உங்கள் பிறந்த திகதியையும் B3 எனும் செல்லில் இன்றைய திகதியையும் டைப் செய்யுங்கள். B5 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”Y”) எனும் சமன் பாட்டை வழங்கும் போது வருட வித்தியாசம் கிடைக்கும். அவ்வாறே B6 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”YM”) என வழங்குங்கள். வருடங்கள் நீங்களாக மாத வித்தியாசம் கிடைக்கும். B7 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”MD”) எனும் சமன்பாட்டை வழங்க வருடங்களையும் மாதங்களையும் தவிர்த்து நாட்களின் வித்தியாச்ம் மாத்திரம் கிடைக்கும்.
இதே சமன்பாட்டை இன்னும் சற்று மாற்றி இன்று உன் வயது …வருடங்கள் … , மாதங்கள் …., நாட்கள் எனவும் காட்டலாம். அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும் பங்ஸனையும் பிரயோகிக்க் வேண்டும். இந்த பங்ஸன் என் பெறுமாணத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது.
அதற்கு வேறொரு செல்லில் =”இன்று உன் வயது ” & TEXT(B5, “0″) & ” வருடங்கள் ,” & TEXT(B6, “0″) & ” மாதம் ,” & TEXT(B7, “0″) & ” நாட்கள்.” என வழங்குங்கள். இன்று உன் வய்து 19 வருடங்கள் ,1 மாதம் ,19 நாட்கள். எனும் விடையை எக்ஸல் காண்பிக்கும். .