வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம் - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Monday, December 16, 2013

வெப்ஹோஸ்டிங் பற்றிய அடிப்படையை தெரிந்து கொள்வோம்


முதலில் இணையதளம் (website) என்பது என்னவென தெரிந்துகொள்வோம் இணையதளம் என்பது பல்வேறு தகவல்களை கொண்ட தகவல் களம் ஆகும் . இதில் பொதுவான தகவல்களோ, உதவிகுறிப்புகளோ, சமையல் குறிப்புகளோ, தயார்செய்யப்படும் பொருட்களின் சந்தையாகவோ அல்லது நம்முடைய கருத்துகளோ ஆகிய எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தகவல் பரிமாற்றம்தான் இந்த இணையதளத்தின் அடிப்படை பயனாகும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது அறிவு பரிமாற்றம் ஆகும். மேற்கண்ட எல்லா வகைதகவல்களிலும் இந்த அறிவு பரிமாற்றம்தான் அடிப்படையாக இருக்கின்றது.
களப்பெயர்(domain name),இணைய சேவையாளர்(Web server), கற்றையின் அளவு (bandwidth),html ஆகியவையே இணைய தளத்தின் அதன் அடிப்படையாகும்
நம்மூரில் சாலையோரங்களிலும்  ஒரு வடம் (cable) போன்று அதாவது கண்ணாடி இழையினான கம்பியை(optical fibre cable(OFC)) பதிக்கிறார்களே அந்த வட(cable)இணைப்பு தொலைத்தொடர்பு துறையின்முதுகெலும்பாகும். இந்த வடஇணைப்புகளின் மூலம் தொலைத்தொடர்பு துறையானது இந்தியா முழுதும் உள்ள அனைத்து நகரங்களையும் இணைத்து. அதனடிப்படையில் இந்திய தொலைதொடர்புதுறை இயங்கிவருகிறது. இவ்வாறே இந்தியாவில் இருந்து ஒவ்வொரு வெளிநாட்டிற்கும் ஒரு கடல் வழி வடம் உண்டு.
இந்த தொலைதொடர்பு வடங்களை அடிப்படையாக  கொண்டுதான் நாம் தற்போது பயன்படுத்திடும் இணையம் இயங்குகிறது..
இந்தியாவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்கள் பிஎஸ்என்எல்வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் அவ்வாறே அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் உள்ளவர்களும் At &T வழியாக அகல்கற்றை இணைய இணைப்பு பெற்றிருக்கின்றார்கள் . இவ்வாறே ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் தொலைதொடர்பு சேவை நிறுவனம் வழியாக அகல்கற்றை இணையஇணைப்பு பெற்று ஒருநாட்டு மக்கள் மற்றொருநாட்டவருடன் இணையத்தின் வாயிலாக தமக்குள் தொடர்பு கொள்ள அனுமதிக்கபடுகின்றார்கள்.
நாம் microsoft என்று நம்முடைய இணைய உலாவியில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் http://www.microsoft.comஎன்ற  அக்குறிப்பிட்ட இணைய பக்கத்தை நம்முடைய கணினியினுடைய திரையில் பிரதிபலிக்க செய்கின்றது
இந்த தகவலை நம்முடைய உலாவியில் வழங்குவதற்காக ஈருடல் ஓருயிர் போல ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை என்றநிலையில் செயல்படும். இணைய வழங்கி, டிஎன்எஸ் வழங்கி ஆகிய இருஅமைப்பு நமக்கு பயன்படுகின்றன..
இவற்றுள் டிஎன்எஸ் வழங்கிதான் மிகப்பெரிய பணியை செய்கின்றது. அதாவது நாம் தொலைதொடர்பு துறை வழியாக இணையதளத்தினை தொடர்புகொள்ளும்போது தொலைதொடர்பு துறையின் DNS அமைப்பு வழியானது இணைய வழங்கி இருக்குமிடத்தை கண்டறிந்து நம்மை மிகச்சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றது
இந்த DNS என்பது Domain Name System என்ற பெயரின் சுருக்கு பெயராகும் இது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமைப்பில் இணைக்கபட்டிருக்கும் கணினிகள், சேவைகள், போன்ற அனைத்து இணைய அமைப்பிற்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். இதில் பங்கேற்கும்  ஒவ்வொரு கண்னிக்கும் ஒதுக்கப்படும் களப்பெயர்களுடன் (Domain) இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. அதுமட்டுமின்றி கணினியின் வன்பொருட்களையும், பெயர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் அவற்றை தொடர்புகொள்வது பெரிய சிரமமாகும் அதனை தவிர்த்து குழப்பம் எதுவுமில்லாமல் ஒரேமாதிரியான ஒழுங்குமுறையுடன் இந்த பெயர்கள் இருந்தால் தொடர்புகொள்வதற்கு எளிதாக இருக்கும் உதாரணமாக பெயரின் பின்னொட்டு ஆனது..com என இருந்தால் வியாரதொடர்புடையன .edu என இருந்தால் கல்வி தொடர்புடையன என சுலபமாக அறிந்து கொள்ள ஏதுவாகின்றது.
அதனடிப்படையில் நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் இந்த களப் பெயர்களை,இணைய உலாவியில் உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்க ளாக மொழிபெயர்க்கபடுகின்றது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா http://www.tamilcomputer.comஎன்பது 75.126.38.186 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.
இணையத்தினை பயன்படுத்தும் அனைவரும் பேண்ட்வித் என்ற சொல்லை பற்றி கேள்விபட்டிருக்கலாம் அல்லது அறிந்திருக்கலாம்.
நம்மால் பயன்படுத்தபடும் இணையத்தளங்கள் அனைத்திற்கும் இந்த பேண்ட்வித் தான் அடிப்படை தேவையாகும்.
நம்மூரில் வசிப்பவர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அகல்கற்றை சேவைஇணைப்பை பெற்றிருந்தார். ஒருசில மாதம் கழித்து வந்த கட்டண அறிக்கையை பார்த்தபோது அவருக்கு தீவிர நெஞ்சுவலி வரும்படி ஆகிவிட்டது சாதாரணமாக வரவேண்டிய கட்டணத்தினை விட திடீரென 5 மடங்கு அதிகமாக வந்துவிட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று வினவியபோது ’’நீங்கள் வழக்கமாக செலுத்திய கட்டணத்திற்காக எங்களால் அளிக்கபடும் சேவையை விட அதிகமாக நீங்கள் இணையத்தினை பயன்படுத்துவிட்டீர்கள் ’’ அதனால்தான் இந்த கட்டணம் அதிகமாக வந்தது என்று கூறினார்கள். அதிகமாக பயன்படுத்தியதை பற்றி தமக்கு புரியுமாறு விளக்கிகூறும்படி கோட்டுகொண்டார்
அதாவது நீங்கள் பயன்படுத்திய பேண்ட்வித்தை உறுதியளித்த வரையறையைவிட தாண்டி நீங்கள் பயன்படுத்தியதால் அதற்கேற்றார்ப்போல் கட்டணம் வந்துள்ளது என்றார்கள்..
பேண்ட்வித் என்பது நாம் செலவழித்த இணையம். அதாவது ஒரு இணையதளத்தினை துவங்கும்போது அந்த இணைய தளத்தில் உள்ள படங்கள், காணொளிகள், உரைகள் என அனைத்தும் நம்முடைய கணினியில் தோன்றுவதற்காக அவையனைத்தும் நம்முடைய கணினிக்கு தரவிறக்கம் செய்யப்படும். அந்த தரவிறக்கம் செய்யப்படும் அளவே பேண்ட்வித் ஆகும் .
உதாரணமாக ஒரு செய்திதாள் நிறுவனத்தின் இணையதளத்திலுள்ள ஒரு படம் 1 எம்பி இருக்கிறதெனில்,. அதை நம்முடைய கணினியில் ஒரு முறை பார்த்தால் 1 எம்பி பேண்ட்வித் செலவாகிறது என்ற பொருளாகும். இதே படத்தினை 100 முறை பார்த்தால் 100 எம்பி பேண்ட்வித் செலவாகின்றது. ஒரு மாதத்திற்கு 30 X 100 X1 எம்பி = 3000 எம்பி அதாவது 3 ஜிபி ஆகின்றது. மாதம் ஒன்றிற்கு 2 ஜிபி அளவு பயன்படுத்துவதற்கு  ரூபாய்99 என்ற இணையக்கட்டணம் திட்டத்தில் அனுமதி பெற்றிருந்தால் மீதமுள்ள 1 ஜிபிக்கு நாம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பணம் செலுத்தவேண்டும். 

Post Top Ad

Responsive Ads Here