windows 7 |
விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், மாறா நிலையில் ஓர் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்குகிறது. இது ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டும். அதன் பின்னர் பயனாளர் அக்கவுண்ட் (standard user account) எனப் பலவற்றை உருவாக்கலாம். இவர்களுக்குக் கம்ப்யூட்டரில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் சில வரையறைகளை அமைக்கலாம். இது மட்டுமின்றி, இன்னொரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டையும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் அமைத்துக் கொள்ளலாம். இருவேறு அக்கவுண்ட்களிடையே பயனாளர் மாறிக் கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்குவது எனப் பார்க்கலாம். எப்படி ஒரு பயனாளர் அக்கவுண்ட்டினை, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டாக மாற்றலாம் என இங்கு காணலாம்.
1. கண்ட்ரோல் பேனலைத் திறந்து “User Account” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
2. அல்லது ஸ்டார்ட் மெனுவில் “User Account” என டைப் செய்து தேடலாம்.
3. அடுத்து, நாம் அக்கவுண்ட் வகையினை மாற்றிக் கொள்ள, “Change your account type” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
4. இன்னொரு பயனாளர் அக்கவுண்ட்டில் செயல்பட “Manage another account” என்பதில் கிளிக் செய்திடவும்.
5. பயனாளருக்கான ஐகானில் (“user’s icon”) டபுள் கிளிக் செய்திடவும். அல்லது “Change the account type” என்பதில் ஒருமுறை கிளிக் செய்திடவும். இதன் மூலம் இப்போது ஒரு புதிய விண்டோ “Select a new account type for [xyz user]” என்ற தலைப்பில் கிடைக்கும். இதில் இரண்டு ஆப்ஷன்கள் – “Administrator” or “Standard user” – கிடைக்கும்.
6. தேவையான ஆப்ஷன் தேர்ந்தெடுத்தவுடன் “Change account type” என்பதில் கிளிக் செய்திடவும்.
இதே போல அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டில் இருந்து பயனாளர் அக்கவுண்ட்டிற்கும் மாறிக் கொள்ளலாம்.
டாஸ்க்பார் சுத்தம் டாஸ்க்பாரில் கடிகாரம், வால்யூம், பவர் லெவல், நெட்வொர்க் மற்றும் சில ஐகான்களை மறைத்து வைக்கலாம். உங்களுக்குத் தேவையில்லாத பட்சத்தில், எதற்காக நீண்ட குப்பை போல இவை தோற்றமளிக்க வேண்டும்? இதற்கான வேலைகள் என்ன என்று பார்ப்போமா!
1.டாஸ்க்பாரின் வலது பக்கத்தில், மேல் நோக்கி உள்ள அம்புக் குறி ஒன்றைக் காணலாம். அதன் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று சுழற்றுங்கள். அப்போது “Show hidden icons” என்ற சிறிய அறிவிப்பு பட்டன் ஒன்றில் கிடைக்கும்.
2. இந்த பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், “Customize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது “Notification Area Icons” கண்ட்ரோல் பேனல் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவின் கீழாக, “Turn system icons on or off” என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது இந்த விண்டோ “Turn system icons on or off” என்ற விண்டோவாக மாறும். இனி ஏதேனும் சிஸ்டம் ஐகான், எடுத்துக்காட்டாக “Clock”, “Volume”, “Network”, “Power”, and “Action Center”, என்பதில் கீழாக இழுக்கவும். இதனை வைத்துக் கொள்ளவா வேண்டாமா என்பதற்கு “On” or “Off” என இரண்டு ஆப்ஷன் கிடைக்கும். அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். இனி நீங்கள் தேர்ந்தெடுத்தபடி மட்டுமே ஐகான்கள் டாஸ்க்பாரில் காட்டப்படும்.