Wifi சேவையை பாதுகாப்பாக பயன்படுத்தவது எப்படி? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 13, 2013

Wifi சேவையை பாதுகாப்பாக பயன்படுத்தவது எப்படி?

Wi-Fi என்ற இணைப்பில்லா இணைய முறையானது, இன்று தவிர்க்கமுடியாத சக்தியாக 
உருவெடுத்துள்ளது. பெரும்பாலானோர்களால் இந்த Wi-Fi வசதியானது 
பயன்படுத்துகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், தாங்கும் 
விடுதிகள், இவ்வளவு ஏன், மருத்துவமனைகள் கூட இந்த வசதியை இலவசமாகவும், 
வியாபார நோக்கங்களுக்காகவும் தருகின்றன.

இந்த Wi-Fi வசதியை 
பயன்படுத்துவது பாதுகாப்பானதா? அப்படியே ஆபத்தென்றால் பாதுகாப்பது எப்படி? 
என்ற உங்களுடைய கேள்விகளின் விளக்கங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன.

பின்பற்றி பயனடையுங்கள்!

ஷேரிங்:

நீங்கள்
பப்ளிக் நெட்வொர்க் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில்கொள்க! எனவே 
அதில் எதை ஷேரிங் செய்யவேண்டும் எவற்றையெல்லாம் மறைக்கவேண்டும் என்பதையும் 
நீங்கள் தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமானது.

உதாரணத்திற்கு, பாடல்கள், பிரிண்டர்கள் மற்றும் பல்வேறு தரவுகள் அனைவருடனும் ஷேர் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யுங்கள்!



VPN
பயன்படுத்தவும்:

உங்கள்
Wi-Fi
வசதியானது VPN என்ற நெட்வொர்க் முறையில் செயல்பட்டால் 
பாதுகாப்பானதாக இருக்கும். எனவே இந்த வகையான நெட்வொர்க்கை 
கேட்டுவாங்குங்கள்!


ஆட்டோமாடிக் வேண்டாமே:

சிலர்
Wi-Fi
வசதியை பயன்படுத்தும்பொழுது ஒவ்வொருமுறை இணைப்பை 
ஏற்ப்படுத்தும்போழுது தானாகவே இணைத்துக்கொள் என்றதை 
தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

இது உங்களுடைய வேலையை சுலபமாக்காது. 
மேலும் உங்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு முறையும் நீங்களே
இணைப்பை ஏற்படுத்த மறக்காதீர்கள்!


பெயர் சரியா என சரிபாருங்கள்:

Wi-Fi
முறையில் இணையும்பொழுது சரியான இணைப்புடன்தான் இணைப்பை ஏற்படுத்துகிரோமா 
என்பதை சரிபாருங்கள். தேவையில்லாத போலியான Wi-Fi பெயர்கள் வழியாக உங்களுடைய
கடவுச்சொல்கள் திருடப்படும் அபாயமும் உள்ளதை நினைவில்கொள்க!


கடவுச்சொல்லை பாதுகாக்கவும்:

தனித்தனியான
Wi-Fi
கணக்குகளுக்கு தனித்தனியான கடவுச்சொல்லை பயன்படுத்தவும். Wi-Fi 
இணைப்புகளில் கடவுச்சொல்கள்தான் மிகவும் முக்கியமானது.


ஃபயர்வால்:

Wifi
சேவைகளை பயன்படுத்துகையில் உங்களுடைய கணினி மற்றும் நெட்வொர்க் 
ஆகியவற்றின் ஃபயர்வால்களை 'ஆன்' செய்யவும். ஃபயர்வால் 
இயங்கிக்கொண்டிருந்தால் தான் தகவல்கள் திருட்டுக்களை தவிர்க்கமுடியும்.


ஆன்டிவைரஸ் முக்கியம்:

ஆன்டிவைரஸ் மென்பொருள்களை மறக்காமல் பயன்படுத்தவேண்டும். இல்லையேல் உங்களுடைய தகவல்களின் திருட்டை யாராலும் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here