முகநூல் (Facebook) கணக்கினை முழுவதுமாக நீக்க - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 18, 2013

முகநூல் (Facebook) கணக்கினை முழுவதுமாக நீக்க


முகநூலினை பற்றி அறியாத இணைய பயன்பாட்டாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு புகழ்பெற்றது முகநூல் தளமாகும். தகவல்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள கொள்ள பயன்படுவது முகநூல் தளமாகும். தற்போது முகநூல் தளம் தனது போட்டியாளரான கூகுளினை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி விட்டது. தற்போது உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட தளமாக உருவெடுத்துள்ளது முகநூல் தளம் ஆகும். இந்த தளத்தில் பகிரப்படும் பகிர்வுகள் பல தவறானவைகளாகவே உள்ளது. மேலும் ஆபாசமான செய்திகளும் அதிகம் பகிரப்படுகிறன. அதற்கும் மேலாக நம்முடைய சுயதகவல்கள் திருடப்படுகிறன என்பது மிகவும் வருத்தம் அளிக்ககூடிய ஒன்றாக உள்ளது இதனால் பலர் தங்களுடைய முகநூல் கணக்கினை நீக்க முடிவு செய்துள்ளனர். முகநூல் கணக்கில் இருந்து விருப்பதேர்வினை பயன்படுத்தி நீக்க முயன்றால் நம்முடைய தகவல்கள் மறைக்கபடுமே தவிற, நம்முடைய கணக்கு முழுமையாக நீக்கப்படமாட்டாது. முகநூல் கணக்கினை முழுமையாக நீக்க கீழ்காணும் வழிமுறையை பின்பற்றவும்.

முகநூல் கணக்கினை முழுமையாக நீக்க CLICK US
   


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும் அதில் Delete my account என்னும் பொத்தானை அழுத்தவும். 


  
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் கொடுக்கப்பட்டுள்ள அடையாள சொற்களை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது. ஆனால் நீங்கள் முகநூல் கணக்கினை நீக்கும் முன் அதில் உள்ள தகவல்களை நகல் எடுத்து வைத்து கொள்ளவும். நீங்கள் செய்த நாளிலிருந்து 14 நாட்கள் வரை குறிப்பிட்ட முகநூல் கணக்கில் உள்நுழையக்கூடாது. அவ்வாறு இருந்தால் மட்டுமே முகநூல் கணக்கு நீக்கம் செய்யப்படும். 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here