கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதற்கு உதவி புரிகிறத ! - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 12, 2013

கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதற்கு உதவி புரிகிறத !


நமது கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்கி வேகம் குறையாமல் செயல்பட CCleaner என்ற மென்பொருள் உதவி புரிகிறது.

மேலும் கணணியின் Registry கிளீன்(Clean) செய்யவும் உதவுகிறது. CCleaner உள்ள வசதிகளையும் மேலும் பல வசதிகளையும் கொண்ட மென்பொருள் JetClean. CCleaner போலவே பயன்படுத்த எளிதாகவும், செயலில் அருமையாகவும் உள்ளது.

மேலும் இதில் மென்பொருள்களை நீக்கும்(Uninstall) வசதியும் உள்ளது. அதிக நினைவகத்தை(Memory) பிடித்துள்ள மென்பொருள்களை தனியே காணும் வசதியும் நீக்கும்(Uninstall) வசதியோடு உள்ளது.

மேலும் தேவையில்லாத டூல்பார்(Tool Bar) இருந்தால் அவற்றை நீக்க எளிதாக டூல்பார்களை மட்டும் தனியே காணும் வசதி உள்ளது.

இணையவேகத்தை கூட்ட Internet Booster என்ற வசதியும், உங்கள் RAM வேகத்தை கூட்ட RAMClean என்ற வசதியும் உள்ளது. செயல்படும் போது குறைந்த நினைவகத்தில் வேகமாக செயல்படுகிறது.

Scan பண்ணுங்க அப்புறம் Repair பண்ணுங்க சுத்தமாகிவிடும்.


 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here