நேரடியாக இணையதள பக்கத்தினை நம்முடைய பவர்பாயின்ட்டின் படவில்லையில் காட்சியாக இணைத்து காண்பித்திட விரும்பும்வோம் இந்நிலையில் அவ்வாறான இணையதள பக்க காட்சியை எவ்வாறு ஒரு படவில்லையில் இணைப்பது என இப்போது காண்போம்
4.1
இதற்காக முதலில் the LiveWeb add-in இனுடைய2007/2010 பதிப்பை பதிவிறக்கம் செய்து File=>Options=> Add-Ins=>(Manage:)PowerPoint Add-ins => Go =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திடுக பின்னர் தோன்றிடும்Add-Ins என்ற உரையாடல் பெட்டியில் Add New என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் Add New PowerPoint Add-ins என்ற உரையாடல் பெட்டியில் LiveWep.ppam என்பதை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றும் மேக்ரோ பற்றிய எச்சரிக்கை செய்திபெட்டியில் Enable Macros என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின் இந்த LiveWeb add-in நம்முடைய கணினியில் நிறுவபட்டுவிடும்
பிறகு எம்எஸ் பவர்பாயின்ட் பயன்பாட்டினை செயற்படுத்தியவுடன் விரியும் திரையில்Insert என்ற தாவியின் திரையை தோன்றசெய்து அதிலLiveWebஎன்ற பகுதியில் உள்ள WebPage என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் LiveWebஎன்ற விரைவு வழிகாட்டி திரையில் நமக்கு உதவுவதற்காக தயார்நிலையில் தோன்றிடும்
முதல் திரையில் nextஎன்ற பொத்தானை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக பிறகு தோன்றிடும் திரையில் நாம் இணைக்கவிரும்பும் இணையபக்கத்தின் முகவரியை www.aayiramarivom.com என்றவாறு உள்ளீடு செய்து Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில் yes,refresh web page automatically(real -tine update)என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்துகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக
அதன்பின்னர் தோன்றிடும் திரையில் படவில்லையில் இந்த இணைய பக்கத்தின் இடஅமைவு அளவு போன்றவற்றை தெரிவுசெய்துகொண்டு nextஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக
பணிமுடிவுறும் இறுதி திரையில் Finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வெற்றிகரமாக இந்த இணையபக்கம் நம்முடைய படவில்லையில் இணைக்கபட்டதாக நமக்கு செய்திபெட்டிமூலம் அறிவிப்பு செய்திடும் .
No comments:
Post a Comment