பொழுது போக்கிற்கு, சிறிய அளவில்பணம் சம்பாதிக்கவும், கருத்துகளை தெரிவித்து மக்களிடம் கருத்துகளை தெரிவிக்கவும் வலைபூ ஆரம்பிக்கப்படுகிறது. பெரும்பாலனவர்கள் வலைபூக்களை தொடங்கிபதிவிடுவதோடு சரி. அவற்றின் பார்வையாளர்களை அதிகரிக்க சிறிய தேடுபொறி மாற்றங்களை செய்ய முனைவது இல்லை. அதனால் சிறப்பான கருத்துகளை கொண்டவலை தளங்களும் கூட அதிக அளவு பிரபலம் ஆவது இல்லை.
இத்தகைய குறைகளை போக்க கீழ்கண்ட 8 படிநிலைகள் தொடக்க நிலையாக பதிவிடப்படுகிறது.
1. தேடுபொறிகளில் இணைத்தல்
பெரும்பாலான பார்வையாளர்களை பெற்று தருவதில் சிறப்பான இடத்தினை வகிப்பது தேடுபொறிகள் தான். வலைபூ தொடங்கியவுடன் தேடுபொறிகளில் அவற்றை இணைப்பது தான் முதல் பணி. அவ்வாறு இணைப்பதால் இவை பட்டியலில் இணைக்கப்பட்டு தொடர்பான தகவல்கள் தேடப்படும் போது முன்னனியில் வருகின்றன.
2. வலை பூ பட்டியலில் இணைதல்
தேடுபொறியில்இணைப்பதற்கு அடுத்தபடியாக நாம் நம்முடைய வலைபூ வை முதன்மையான திரட்டி அல்லது பட்டியல்களில் இணைக்க வேண்டும். இதன் வாயிலாக அதிகமான பார்வையாளர்கள் வலைபூவை பார்க்க முனைவார்கள் . இதன் வாயிலாக அதிக பார்வையாளர்களை பெறலாம்.
சில வலைபூ திரட்டிகள் : தமிழ் மணம், இன்லி, தமிழ் 10
3. சமூக வலைதளங்களின்பங்கு
இன்றைக்கு சமூக வலை தளங்களான FACEBOOK, TWITTER ஆகியவற்றை பயன்படுத்தான இன்டர்நெட் பயனாளர்களை விரல் விட்டு எண்ணலாம். இந்த வகை சமூக இணையதளங்களும் பார்வையாளர்களை பெற்றுதருவதில் சிறப்பான இடத்தினை பெறுகின்றன.
- FACEBOOK இல் ஒரு பக்கம் தொடங்கி அதை பிரபலபடுத்துங்கள்
- TWITTER ல் ஒரு பக்கம் தொடங்கி அதில் எழுதுங்கள்
- Linked in போன்ற வலை தளங்களிலும் இணைத்துக் கொள்ளுங்கள்
இவற்றை தவிர இன்னும் நிறைய சமூக வலை தளங்கள் காணப்படுகினறன. அவற்றின் மூலமும் வாசகர்களின் பார்வைகளை பெறலாம்.
4. பின்னூட்டம் இடுதல்
பிரபலமான பிற பதிவர்களின் வலை பூக்களை பார்வையிட்டு சிறப்பான கருத்துரைகளை வழங்குவதன் வாயிலாக நம்முடைய வலை பூவிற்கும் பார்வையாளர்களை பெறலாம்.
5. மற்ற வலை பூக்களில் பதிவிடுதல்
இது ஒரு சிறப்பான வழிமுறையாகும். பிரபல வலை பூவில் உறுப்பினராக இணைந்து பதிவிடுவதன் வாயிலாக அவற்றின் வாசகர்களின் குறிப்பிடதகுந்த எண்ணிக்கையிலானவர்களை நாமும் வாசகர்களாக பெறலாம்.
6. FORUM களில் பங்கெடுத்தல் கருத்துகளை பகிருதல்
இணைய கருத்துகளை பகிரும் இடங்களில் கருத்துகளை பகிருவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய இணைப்பையும் அளிக்கும் போது பார்வையாளர்களை பெறலாம். இதுவும் பார்வையாளர்களை பெறும் சிறப்பான வழிமுறையாகும்.
7. உண்மையான முறைபடுத்தப்பட்ட தகவல்களை பதிவிடுதல்
எப்போதும் உண்மைதன்மை தான் பதிவுலகின் மன்னன். ஆகவே பதிவவிடும் முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை நிச்சயதன்மை நிலைத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பான பதிவுகளை பதிவிடுவதன் வாயிலாக அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை பெறலாம்.
Visit Another Blog : BROWSERPLUGIN






No comments:
Post a Comment